மதிராஜனின் கவிதைகள்

Wednesday, September 09, 2009

யார் நீ..?!




நண்பர்காள்..

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

***

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் 'செடி'..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!

Labels:

இதயத்தில் ஊடுருவிய வாள்



விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.

Labels:

பூக்குமா வசந்தம்…


கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்




Labels:


தட்டி எழுப்பு
காற்றை தட்டி எழுப்பினால் புயல்,
மழையை தட்டி எழுப்பினால் வெள்ளம்,
சூரியனை தட்டி எழுப்பினால் வெப்பம்,
மரத்தை தட்டி எழுப்பினால் காற்று.........

உயிரை தட்டி எழுப்பினால் பிணம்,
கோபத்தை தட்டி எழுப்பினால் இரத்தம்,
முகத்தை தட்டி எழுப்பினால் பார்வை,
கண்களை தட்டி எழுப்பினால் காதல்,

காதலை தட்டி எழுப்பினால் ஆசை,
மின்சாரத்தை தட்டி எழுப்பினால் வெளிச்சம்,
என்னை தட்டி எழுப்பினால் உதவி
நட்பை தட்டி எழுப்பினால் அன்பு.



Labels:

பிறவி!


* பொருத்தம் பார்த்துதான்
மண முடித்தோம்
பெரியோர் ஆசியுடன்...

* வருத்தமாகவே
பேசிக் கொள்கிறோம்
நம் மனதுக்குள்
என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்...

* விருந்தினர் முன் மட்டும்
மகிழ்ச்சியாய்
முகம் காட்டுகிறோம்

* மவுனம் கலையும்
காலங்களில் நாம்
பேசிக் கொள்வது பரஸ்பரக்
குற்றச்சாட்டுகளாகவே
நிறைவடைகிறது...

* மறுபிறவி பற்றி
எனக்குப் பயமில்லை
நம்பிக்கையில்லை... எனினும்
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...

Labels:

நட்பு ....

முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..

அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..

பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..

கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்......!!

Labels:

காதலின் அவஸ்தை

இன்றாவது என் காதலை
சொல்லி விடலாமென்று
ஓடோடி வருகிறேன்.

நீ..
எப்பொழுதும் நிற்கும்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
இன்று நிற்கவில்லை.

என்ன செய்வதென்று புரியாமல்
ஒரு ஆட்டோ பிடித்து
அடுத்த நிறுத்தத்திற்கு
நான் வருவதற்குள்..

வழியிலேயே நீ
நான் வந்த ஆட்டோவை
நிறுத்தி ஏறுகிறாய்!

என்னருகில்
வந்தமர்ந்து கொள்கிறாய்!

ஒரு சின்ன 'ஹாய்'
சொல்லி கொள்கிறோம்.

அடுத்த சில நிமிடங்கள்
மௌனமாய்
கடந்துகொண்டிருக்க..

உன் தலைமுடியில்
ஒன்றிரண்டு பறந்துவந்து
என்முகத்தில் படுகிறது.

அதையெடுத்து
உன் -
காதுமடல்களில் சொருகிக் கொண்டு
என்னைப் பார்க்கிறாய்..

அதற்குள்
ஆட்டோ ஒரு பள்ளத்தில்
ஏறி இறங்க,
நீயும் நானும் கொஞ்சம் குலுங்கி
நேரே அமர்வதற்குள் -

உன் தாவணி
காற்றோடு பறந்து வந்து
என் முகத்தை மூடிக்கொள்கிறது!

நீ
ஆவேசமாக அதை எடுத்து
உன் இடுப்பில் சுற்றிக்கொள்கிறாய்.

திரும்பி
ஒருவரை ஒருவர் பார்க்கிறோம்.

பார்த்துவிட்டு
தலைகுனிந்துகொண்டே
லேசாக புன்முறுவல் செய்கிறாய்.

ஆட்டோ இங்குமங்கும் அசைந்து ஆடி
வேகமாகப் போகிறது.

அந்த அசைவுகளால்
உன் உடம்பும் என் உடம்பும்
அவ்வப்போது உரசிக்கொள்கிறது.
உன் மனசும் என் மனசும்
ஒன்றோடோன்று ஒட்டிக்கொள்கிறது.

நீ திரும்பி என்னை
நேராகப் பார்க்கிறாய்..

நானும் பார்க்கிறேன்;

நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய்..
நானும் சிரிக்கிறேன்;

ஏதோ கேட்கிறாய்..
நானும் பதில் சொல்கிறேன்;

மீண்டும் எதோ கேட்கிறாய்
மீண்டும் நான் பதில் சொல்கிறேன்;

அப்படியே..நேரம் கடக்க.. கடக்க
தூரம் கடக்க.. கடக்க
நீயும் நானும்
நிறைய கேட்கிறோம்;
நிறைய பேசுகிறோம்;

நம் காதலைத் தவிர!!

Labels:

ரிங்க் டோன் - காதல் கவிதை

ரிங்க் டோன்

க்ரீங்.. க்ரீங்..
அன்பே.. உன் வீட்டில்
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,

தொடர்பு துண்டிக்கப் பட்டது!

மீண்டும் -
க்ரீங்.. க்ரீங்..
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,

தொடர்பு துண்டிக்கப் பட்டது!

உன் வீட்டில் -
இருப்பவர்களெல்லாம்
திட்டினார்கள்,
எந்த கருங்காளினு தெரியலையே(?)

ஆனால்..
உனக்குத் தெரியும் -

நான் தானந்தக் கருங்காளியென்று!

Labels:

Tuesday, September 08, 2009

என்பேனாவின் புலம்பல்களைபரிசாய்க்
கேட்கும்பருவப் பெண்ணே..
உன்,முதல் பார்வையிலேயே..
மயிலிறகாய் இருந்தவன்..
தென்னங் கீற்றானேன்..!!
சுதந்திர அருவியாய்ச்சுற்றியவனை..
குளத்து நீராய்கைது செய்ததன்காரணம் என்ன..?
என் சுவாசத்தையே எனக்கு பரிசளித்த
தேவதையே..உன்,
சீற்றத்தையும்சேர்த்துக்கொள்ளஆசைப்படும்அகராதி நான்..!***நீசிணுங்கினாய்..இல்லை..
தென்றலுக்குநீ விடும் தூது அது..!
நீ சிரித்தாய்..இல்லை இல்லை.
மலர்களை மலர வைத்தாய்..!!
நீ முறைத்தாய்..ம்ஹும்...
என் கவிதைக்குஇலக்கணம் வகுத்தாய்..
நீ திட்டினாய்..அதுவும் இல்லை..
என் தமிழுக்கேஉயிர் கொடுத்தாய்..!!!
இப்பொழுதெல்லாம்..நீ இல்லாத கனவுகளை..
நான்,கண்டுகொள்வதே இல்லை..!
பெண்ணே..உன் மௌனங்களுக்கும்
உரை எழுத முடிந்தஎனக்கு...
உன் பேச்சின்பொருள்காணும்பொறுமை இல்லையே...!!!
அன்பே,உன் செயல்களுக்குஅர்த்தம் கூறும்அகராதிஎன்ன விலை..?
***உன் நாணத்திற்கோர்உவமை சொல்ல..
இப்பாரினில்பொருளே இல்லையே...!
என் பெயரேஎனக்கு..
மறக்கும் வேளையில்புனைப்பெயர் சூட்டினாய்..
இனியவளே..
உன் உதடுகள்உச்சரிக்கும் பொழுதுதான்
என் பெயரின்இனிமை புரிகிறது..!
வசந்தத்திலும் பூக்காத என் தோட்டம்..
உன் வருகையால்சட்டென்று பூக்கிறது..!!
உன் பெயரைமந்திரமாய் ஜபிக்கும்எனக்கு..
எழுதுவதற்கு மட்டும்எண்ணமே இல்லை..
பேனா முள் கொண்டுஉன் பெயரைக்
கூட காயப்படுத்தஎன்றைக்குமேஎனக்கு உடன்பாடில்லை..!
உயிரே..உன் சுவாசங்கள்எனைசுடும் நாள்வரும்
வரையில்இனி நான்சுவாசிக்கப் போவதுமில்லை..!!!

Labels:

வேசிக்குவெகுமானம்
வயது இருக்கும் வரை..
தாசிக்குதன்மானம்
தாழ் போடும் வரை..

வேங்கைக்குஅவமானம்
வேழம் வாழும் வரை..
வேரலுக்குஅவமானம்
நாதம் தோன்றும் வரை..

விண்ணுக்குஅவமானம்
நிலவு தோன்றும் வரை..
மண்ணுக்குஅவமானம்
பயிர்கள் வாடும் வரை..

பெண்ணுக்குஅவமானம்
பெண்மை மூடும் வரை..
கண்ணுக்குஅவமானம்
காட்சி தோன்றும் வரை..

மருந்துக்குஅவமானம்
காயம் ஆறும் வரை..
பருந்துக்குஅவமானம்
பதுங்கி வாழும் வரை..

நண்பா..நமக்குஅவமானம்..
மடிந்து வாழும் வரை..!
அனுதினம் சாவது ஏன்..?
ஒருதினம் சாவது மேல்..!!!

Labels:

சின்ன சின்ன ஆசைகள்..
செதுக்கி வைத்த ஆசைகள்.
.சின்னப் பெண் இவளுக்காய்சேகரித்த ஆசைகள்.
.
எண்ண அலைகளிலேஏற்றிவைத்த ஆசைகள்..
நெஞ்சின் சிறைகளிலேஉறைந்திருந்த ஆசைகள்..

திங்களின் ஒளியினிலேதனித்திருக்க ஆசை..
தென்றலின் தாலாட்டைத்தமிழ் படுத்த ஆசை..

மேகங்கள் மழையாகும்விதம் பார்க்க ஆசை..
சோகங்கள் அதைப்போலகரைந்தோட ஆசை..

முள்ளில்லா ரோஜாக்கள்நட்டுவிட ஆசை..
மல்லிகையை முள்ளாக்கிதொட்டுவிட ஆசை..!

வண்னத்துப் பூச்சிகளின்மொழி கேட்க ஆசை..
எண்ணத்தில் அதை நிறுத்திஎழுதி வைக்க ஆசை.. !

குருவிகளின் பாஷைதனைகற்றுக் கொள்ள ஆசை..
சுறுசுறுப்பை எறும்பிடத்தேபற்றிக் கொள்ள ஆசை..

அருவிகளின் சலசலப்பில்அயர்ந்திருக்க ஆசை..
இரவுகளின் கதகதப்பில்விழித்திருக்க ஆசை..!

நிலவுதனில் கண்ணுறங்கும்நித்திரையில் ஆசை..
கனவுகளில் கவியெழுதும்காதலிலும் ஆசை... !

னிமலரும் வேளைகளில்பாட்டெழுத ஆசை..
பருவமகள் ஆசைகளைகேட்டெழுத ஆசை..!

Labels:



இதயமே..நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறைதுடிக்கிறாயே..
நீயும் கர்ம யோகிதான்..!
உனக்கு தீங்கு செய்தாலும்நன்மை செய்தாலும்..
உன்னால் இயன்றவரைஇயங்குகிறாய்..
இதயமே..!நீ மட்டும்தான்..
வாலிபம் குறைய குறையஉழைப்பை உயர்த்துகிறாய்..!
உழைப்பை உயர்த்திஎங்கள் நாட்களை குறைக்கிறாய்..!
நீ துடிப்பதால் உயிர் வாழ்கிறதா?
உயிர் இருப்பதால் நீ துடிக்கிறாயா?
புரியாத புதிர்...எது எப்படியோ..
என் இதயம்துடிப்பது மட்டும்எப்பொழுதும்என்னவளின் நினைவுகளாலேயே..!என் இருதயத்தின்இரத்த நாளங்களில்..
அழுத்தம் குறைவதும் அவளாலே..
அதுவேஅவ்வப்போதுஅதிகரிப்பதும் அவளாலே..!!
ஓன்று மட்டும்உறுதி..என் இதயம்விட்டு விட்டுதுடிக்கலாம்..
ஒருபோதும்அவளை விட்டுவிட்டுத் துடித்ததில்லை..!!

Labels:

ஏ புத்தனே..உன்சமாதானக் கொள்கைக்குஇலங்கையில்கொள்ளி வைத்துக்கொண்டிருக்கிறார்களே..!ஈழமே இன்றுஇடுகாடாய்..எங்கள் இனத்தவர்அங்கே..பலிகாடாய்..!எங்கே உன்சமாதானம்..?எங்கே போனதுஉன்சாத்துவீகம்..?*பாலஸ்தீனத்தில்ஐந்து பேர்இறந்தால்வையகமே அழுகிறது..ஈராக்கில்ஒரே ஒருகுண்டு விழுந்தால்அகிலமே அதிர்கிறது..!இலங்கையில் மட்டும்தவிப்பதுதமிழன் என்பதால்..இறப்பதுஎன் இனம் என்பதால்..தமிழக அரசு கூட,மௌனமாய்..மழுப்புகிறது..!*புத்தம் பேசும்புண்ணிய பூமியுத்தக் காடாய்எறிகிறது..புத்த பிக்குகள்யுத்த பிக்குகளாய்எள்ளி நகைப்பதுசுடுகிறது..!ஆயிரம் காரணம்கூறிய போதிலும்புத்தத்தில் கொலைக்குஇடமுண்டோ..?எங்கும்அப்பாவி மக்களின்அழுகுரல் ஓலங்கள்..புத்தத்தில் எங்கேதான்அன்புண்டோ..! ஏ புத்தனே..இன்னும்எத்தனை நாட்கள்எங்களைஏமாற்றப் போகிறாய்..?உன்,புத்தம் சரணம் கச்சாமி..!இன்றுயுத்தம் மரணம் கச்சாமிஆனது..உன்,தர்மம் சரணம் கச்சாமி..!இன்று..இரத்தம் இரணகளம் கச்சாமிஆனது..!!இன்னும்எத்தனை உயிர்கள்இறந்திட வேண்டும் ..?இன்னும்எத்தனைக் காலம்அழுகுரல் வேண்டும்..?இந்தயுத்த பிக்குகள்கொலைவெறி தீர..சொல்வாயா சித்தார்த்தா..?!!!

Labels:

விடியலின் காத்திருப்பிற்கு இக்கவிதை சமர்ப்பணம்!

பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும்,

எரிகின்ற நெருப்பிற்கு - இனி
ஈழமென்று பெயர் வைப்போம்;

விழுகின்ற பிணத்திற்கு - இனி
தமிழனென்று பச்சை குத்துவோம்;

வெடிக்கின்ற குண்டுகளையெல்லாம் - இனி
தமிழ் ரத்தத்தில் அடையாளம் காண்போம்;

காமவெறி பிடித்தால் தமிழென்று சொல்லி
குழந்தைகளை கற்பழிக்கிறார்களாம் -
குறிப்பெடுத்துக் கவிதையாக்கி புத்தகத்தில் அச்சிடுவோம்;

எங்கோ தன் இனம் அழியும் சேதி கெட்டு
கருகுகிறார்கள் முத்துக் குமாரர்கள் - பைத்தியக்
காரர்களெனப் பட்டம் தருவோம்;

கர்பத்தில் சிசுவை கொன்றாலோ, அக்காத்
தங்கைகளை கொன்று - உருப்பருத்தாலோ,
மாணவச் செல்வங்களை குவித்து தீக்கிரையாக்கினாலோ,
தின்ன உணவின்றி இறந்தவர்களின் - மரணவாடை
மூக்கை துளைத்தாலோ -

'ஐயோ அது எங்கள் நாடல்ல' யென
தைரியமாய் ஒதுங்கிக் கொள்வோம்;

பத்திரிகைகளோ பன்னாட்டுச் செய்தி நிறுவனமோ
வந்து 'அழிகின்ற தேசமெனக் கேட்டால் -
'அதோ - அது - இலங்கை' யென வெட்கமின்றி கைகாட்டுவோம்;

சிங்களனுக்கு ஒருவேளை கோபம் - வரும்
மீண்டும் அடிப்பான்; அடிக்கட்டும் ஈழத்தை

நாம் தான் இந்தியராயிற்றே; நின்று
வேடிக்கை பாப்போம், வேண்டுமெனில் -

இறந்தவர்களுக்கெல்லாம் ஒருநிமிட
அஞ்சலி செலுத்திவிடுவோம், நாளை -

பாரதத் தாய் ஒருவேளை நம்மை மன்னித்துவிடலாம்;
இந்திய அரசு இனி வரும் 'தேர்தலை முன்னிட்டு -
ஈழத்திற்கு இந்தியா ஆதரவென கட்டளை பிறப்பிக்கலாம்;

அதுவரை, இறந்திருக்கும் ஆயிரமாயிரம் தமிழர்களின்
உயிர்களுக்கு - என்ன நீதி கிடைத்துவிடும்?

முல்வேளிகளுக்குப் பின்னே -
அனாதையாய் நின்றிருக்கும் குழந்தைகளுக்கு
யாரினி அம்மாப்பா ஆவார்கள்?

கைமுடமும் கால்முடமுமாய் சாவையாவது
கெஞ்சிக் கேட்டு அழுதுக் கொண்டிருக்கும்
தமிழர்களுக்கு நம் எத்தனை பேரால் 'என்ன' ஆதரவை தந்திடமுடியும்?

கண்ணீர் எழுதுகோலில் கசிந்து பயனில்லை
இதயங்களில் கசியட்டும்!!

Labels:

We're finally going to get the bill, for the industrial age.
if the projections are right, it's going to be a big one;
the ecological collapse of the planet.,

Labels:

Modern Technology Owes Ecology , An Apology.

Labels:

Climate change is and will be a significant threat our national security and in a larger sense to life on earth as we know it to

Labels: