மதிராஜனின் கவிதைகள்

Thursday, November 26, 2009

======================

பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?

இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்...
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்....

- பாரதியார்
=========================

தோல்வியை காதலிப்பவன்..... அதிஷ்ட்டத்திற்க்கு அர்த்தம் தெரியாதவன்.... நானே... எனது... நல்ல நண்பன்...

"Try not to become a man of success but rather try to become a man of value" - Albert Einstein

"Fear Not. What is not real, never was and never will be. What is real, always was and cannot be destroyed." - bhagavath geethai

"மற்றவர்களுக்கு மண்டியிட்டு வாழ்வதை விட நான் நிமிர்ந்து நின்றே சாவேன்" - சே குவேரா

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே.....!! - சே குவேரா

“If you tremble indignation at every injustice then you are a comrade of mine.” - Che Guevara

இறைவன் மனிதனுக்குச் சொன்னது "கீதை"
மனிதன் இறைவனுக்குச் சொன்னது "திருவாசகம்"
மனிதன் மனிதனுக்குச் சொன்னது "திருக்குறள்"


=================
======

"எவர் தடுப்பினும் விடியல் பிறக்கும்"
"எவர் மறைப்பினும் கதிரவன் உதிக்கும்"
"விடியலின் கதிரில் பனி போல் ஒழிவர் எம் எதிரிகள்"

Labels:

காதலில் விழுந்த கவிதை

விழிமலர உன் இதழ் விரிய சிந்திய சிரிப்பால்
வழித்தேடி என் மனம் நிறைந்ததே! பூரிப்பால்
முகம்மலர உனைநோக்கினனோ! அன்பால்
அகம்மகிழ உருக்குதென்னை காதல் பிறப்பால்

விண்ணிருக்கும் நிலவும் நீ என்பேனே!
கண்ணிருக்கும் பார்வையும் நீ என்பேனே!
கள்ளிருக்கும் இதழும் நீ என்பேனே!
உள்ளிருக்கும் உயிரே நீ என்பேனே...

விழிக்கூறும் உன் மௌன மொழிகூட தருதே சுவை
எழில்தரும் உன் நளினமும் தாங்குதே! காதலின் தேவை
எனை மீட்டும் உன் பெயரிலும் ஒரு அழகிய இசை
உனைத்தாங்கும் வரைதான்.. என் இதயம் துடித்திடவே ஆசை

மழையென நனைத்தாய் உயிர்வரை அன்பாய்
தழைத்தோங்கும் செடியென வாழும்வகை மாற்றினாய்
நினைத்தேங்கும் காதல் உள் நிரப்பி வைத்தாய்
அணைத்தேங்கும் நீராய் ஆசைகள் பூட்டி வைத்தாய்..

உறவென நீ வர எதிர்ப்பார்க்கும் என் நெஞ்சம்
சிறகெனவே பறக்கும் எனதாசைகள் உன்னிடமே தஞ்சம்
சிறு பிள்ளை ஆவேனே உன்னோடு நான் மஞ்சம்
திருநாளை வரவேற்க என் நாட்களும் கெஞ்சும்

இனிய மொழிப்பேச்சும் விழிவீச்சும் உன்னிடத்திலே
இனிக்கும் தருணங்கள் இனிவசமாகட்டும் என்னிடத்திலே
இனியவளே இனி என் வாழ்க்கை உன்னிடத்திலே
இனி உரைக்க என்ன உண்டு என்னிடத்திலே...

Labels:

உங்கள் எதிர்காலம்

சோகம் வரும்போது, சோர்ந்து விடாதே...
கவலை வரும்போது கண்ணீர் விடாதே...
கஷ்டம் வரும்போது கலங்கி விடாதே...
மரத்தில் உள்ள இலைகள் கீழே உதிர்வது வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே
தோல்வியை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு ...

Labels: