மதிராஜனின் கவிதைகள்

Tuesday, September 08, 2009

விடியலின் காத்திருப்பிற்கு இக்கவிதை சமர்ப்பணம்!

பாரதத் தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும்,

எரிகின்ற நெருப்பிற்கு - இனி
ஈழமென்று பெயர் வைப்போம்;

விழுகின்ற பிணத்திற்கு - இனி
தமிழனென்று பச்சை குத்துவோம்;

வெடிக்கின்ற குண்டுகளையெல்லாம் - இனி
தமிழ் ரத்தத்தில் அடையாளம் காண்போம்;

காமவெறி பிடித்தால் தமிழென்று சொல்லி
குழந்தைகளை கற்பழிக்கிறார்களாம் -
குறிப்பெடுத்துக் கவிதையாக்கி புத்தகத்தில் அச்சிடுவோம்;

எங்கோ தன் இனம் அழியும் சேதி கெட்டு
கருகுகிறார்கள் முத்துக் குமாரர்கள் - பைத்தியக்
காரர்களெனப் பட்டம் தருவோம்;

கர்பத்தில் சிசுவை கொன்றாலோ, அக்காத்
தங்கைகளை கொன்று - உருப்பருத்தாலோ,
மாணவச் செல்வங்களை குவித்து தீக்கிரையாக்கினாலோ,
தின்ன உணவின்றி இறந்தவர்களின் - மரணவாடை
மூக்கை துளைத்தாலோ -

'ஐயோ அது எங்கள் நாடல்ல' யென
தைரியமாய் ஒதுங்கிக் கொள்வோம்;

பத்திரிகைகளோ பன்னாட்டுச் செய்தி நிறுவனமோ
வந்து 'அழிகின்ற தேசமெனக் கேட்டால் -
'அதோ - அது - இலங்கை' யென வெட்கமின்றி கைகாட்டுவோம்;

சிங்களனுக்கு ஒருவேளை கோபம் - வரும்
மீண்டும் அடிப்பான்; அடிக்கட்டும் ஈழத்தை

நாம் தான் இந்தியராயிற்றே; நின்று
வேடிக்கை பாப்போம், வேண்டுமெனில் -

இறந்தவர்களுக்கெல்லாம் ஒருநிமிட
அஞ்சலி செலுத்திவிடுவோம், நாளை -

பாரதத் தாய் ஒருவேளை நம்மை மன்னித்துவிடலாம்;
இந்திய அரசு இனி வரும் 'தேர்தலை முன்னிட்டு -
ஈழத்திற்கு இந்தியா ஆதரவென கட்டளை பிறப்பிக்கலாம்;

அதுவரை, இறந்திருக்கும் ஆயிரமாயிரம் தமிழர்களின்
உயிர்களுக்கு - என்ன நீதி கிடைத்துவிடும்?

முல்வேளிகளுக்குப் பின்னே -
அனாதையாய் நின்றிருக்கும் குழந்தைகளுக்கு
யாரினி அம்மாப்பா ஆவார்கள்?

கைமுடமும் கால்முடமுமாய் சாவையாவது
கெஞ்சிக் கேட்டு அழுதுக் கொண்டிருக்கும்
தமிழர்களுக்கு நம் எத்தனை பேரால் 'என்ன' ஆதரவை தந்திடமுடியும்?

கண்ணீர் எழுதுகோலில் கசிந்து பயனில்லை
இதயங்களில் கசியட்டும்!!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home