வேசிக்குவெகுமானம்
வயது இருக்கும் வரை..
தாசிக்குதன்மானம்
தாழ் போடும் வரை..
வேங்கைக்குஅவமானம்
வேழம் வாழும் வரை..
வேரலுக்குஅவமானம்
நாதம் தோன்றும் வரை..
விண்ணுக்குஅவமானம்
நிலவு தோன்றும் வரை..
மண்ணுக்குஅவமானம்
பயிர்கள் வாடும் வரை..
பெண்ணுக்குஅவமானம்
பெண்மை மூடும் வரை..
கண்ணுக்குஅவமானம்
காட்சி தோன்றும் வரை..
மருந்துக்குஅவமானம்
காயம் ஆறும் வரை..
பருந்துக்குஅவமானம்
பதுங்கி வாழும் வரை..
நண்பா..நமக்குஅவமானம்..
மடிந்து வாழும் வரை..!
அனுதினம் சாவது ஏன்..?
ஒருதினம் சாவது மேல்..!!!
Labels: mathirajan


0 Comments:
Post a Comment
<< Home