என்பேனாவின் புலம்பல்களைபரிசாய்க்
கேட்கும்பருவப் பெண்ணே..
உன்,முதல் பார்வையிலேயே..
மயிலிறகாய் இருந்தவன்..
தென்னங் கீற்றானேன்..!!
சுதந்திர அருவியாய்ச்சுற்றியவனை..
குளத்து நீராய்கைது செய்ததன்காரணம் என்ன..?
என் சுவாசத்தையே எனக்கு பரிசளித்த
தேவதையே..உன்,
சீற்றத்தையும்சேர்த்துக்கொள்ளஆசைப்படும்அகராதி நான்..!***நீசிணுங்கினாய்..இல்லை..
தென்றலுக்குநீ விடும் தூது அது..!
நீ சிரித்தாய்..இல்லை இல்லை.
மலர்களை மலர வைத்தாய்..!!
நீ முறைத்தாய்..ம்ஹும்...
என் கவிதைக்குஇலக்கணம் வகுத்தாய்..
நீ திட்டினாய்..அதுவும் இல்லை..
என் தமிழுக்கேஉயிர் கொடுத்தாய்..!!!
இப்பொழுதெல்லாம்..நீ இல்லாத கனவுகளை..
நான்,கண்டுகொள்வதே இல்லை..!
பெண்ணே..உன் மௌனங்களுக்கும்
உரை எழுத முடிந்தஎனக்கு...
உன் பேச்சின்பொருள்காணும்பொறுமை இல்லையே...!!!
அன்பே,உன் செயல்களுக்குஅர்த்தம் கூறும்அகராதிஎன்ன விலை..?
***உன் நாணத்திற்கோர்உவமை சொல்ல..
இப்பாரினில்பொருளே இல்லையே...!
என் பெயரேஎனக்கு..
மறக்கும் வேளையில்புனைப்பெயர் சூட்டினாய்..
இனியவளே..
உன் உதடுகள்உச்சரிக்கும் பொழுதுதான்
என் பெயரின்இனிமை புரிகிறது..!
வசந்தத்திலும் பூக்காத என் தோட்டம்..
உன் வருகையால்சட்டென்று பூக்கிறது..!!
உன் பெயரைமந்திரமாய் ஜபிக்கும்எனக்கு..
எழுதுவதற்கு மட்டும்எண்ணமே இல்லை..
பேனா முள் கொண்டுஉன் பெயரைக்
கூட காயப்படுத்தஎன்றைக்குமேஎனக்கு உடன்பாடில்லை..!
உயிரே..உன் சுவாசங்கள்எனைசுடும் நாள்வரும்
வரையில்இனி நான்சுவாசிக்கப் போவதுமில்லை..!!!
Labels: mathirajan


0 Comments:
Post a Comment
<< Home