மதிராஜனின் கவிதைகள்

Tuesday, September 08, 2009



இதயமே..நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறைதுடிக்கிறாயே..
நீயும் கர்ம யோகிதான்..!
உனக்கு தீங்கு செய்தாலும்நன்மை செய்தாலும்..
உன்னால் இயன்றவரைஇயங்குகிறாய்..
இதயமே..!நீ மட்டும்தான்..
வாலிபம் குறைய குறையஉழைப்பை உயர்த்துகிறாய்..!
உழைப்பை உயர்த்திஎங்கள் நாட்களை குறைக்கிறாய்..!
நீ துடிப்பதால் உயிர் வாழ்கிறதா?
உயிர் இருப்பதால் நீ துடிக்கிறாயா?
புரியாத புதிர்...எது எப்படியோ..
என் இதயம்துடிப்பது மட்டும்எப்பொழுதும்என்னவளின் நினைவுகளாலேயே..!என் இருதயத்தின்இரத்த நாளங்களில்..
அழுத்தம் குறைவதும் அவளாலே..
அதுவேஅவ்வப்போதுஅதிகரிப்பதும் அவளாலே..!!
ஓன்று மட்டும்உறுதி..என் இதயம்விட்டு விட்டுதுடிக்கலாம்..
ஒருபோதும்அவளை விட்டுவிட்டுத் துடித்ததில்லை..!!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home