மதிராஜனின் கவிதைகள்

Tuesday, September 08, 2009

சின்ன சின்ன ஆசைகள்..
செதுக்கி வைத்த ஆசைகள்.
.சின்னப் பெண் இவளுக்காய்சேகரித்த ஆசைகள்.
.
எண்ண அலைகளிலேஏற்றிவைத்த ஆசைகள்..
நெஞ்சின் சிறைகளிலேஉறைந்திருந்த ஆசைகள்..

திங்களின் ஒளியினிலேதனித்திருக்க ஆசை..
தென்றலின் தாலாட்டைத்தமிழ் படுத்த ஆசை..

மேகங்கள் மழையாகும்விதம் பார்க்க ஆசை..
சோகங்கள் அதைப்போலகரைந்தோட ஆசை..

முள்ளில்லா ரோஜாக்கள்நட்டுவிட ஆசை..
மல்லிகையை முள்ளாக்கிதொட்டுவிட ஆசை..!

வண்னத்துப் பூச்சிகளின்மொழி கேட்க ஆசை..
எண்ணத்தில் அதை நிறுத்திஎழுதி வைக்க ஆசை.. !

குருவிகளின் பாஷைதனைகற்றுக் கொள்ள ஆசை..
சுறுசுறுப்பை எறும்பிடத்தேபற்றிக் கொள்ள ஆசை..

அருவிகளின் சலசலப்பில்அயர்ந்திருக்க ஆசை..
இரவுகளின் கதகதப்பில்விழித்திருக்க ஆசை..!

நிலவுதனில் கண்ணுறங்கும்நித்திரையில் ஆசை..
கனவுகளில் கவியெழுதும்காதலிலும் ஆசை... !

னிமலரும் வேளைகளில்பாட்டெழுத ஆசை..
பருவமகள் ஆசைகளைகேட்டெழுத ஆசை..!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home