மதிராஜனின் கவிதைகள்

Saturday, October 10, 2009

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா
--------------------------------
--------------------------------------------
நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ
------------------------------------
----------------------------------------
பாதையை தேடாதே....... உருவாக்கு - லெனின்
----------------------------------
----------------------------------------
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் - விவேகானந்தர்
----------------------------
----------------------------------------------
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்
----------------------------------
----------------------------------------
ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை
- தந்தை பெரியார்
--------------------------------
-----------------------------------------
தோல்வியிலிருந்து நாம் தவறுகளை திருத்திகொண்டால் தோல்வியும் வெற்றிதான் -
மல்கொல்ம் போர்ப்ஸ்
--------------------------------
------------------------------------
போரி
ன் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்
என்றேனும் கூடுகட்டும்! - வைரமுத்து

Labels:

0 Comments:

Post a Comment

<< Home