மதிராஜனின் கவிதைகள்

Saturday, April 15, 2006

வசந்தம்வரும்
சிந்திக்க வேண்டும் சீர்தூக்கிப் பார்க்கும்
சிறப்பாற்றல் உந்தன் உடமை-நீ
முந்திப்போரிட்டு,முடிவுற்றுத் தொடரும்
மூதாதை யோரின் மடமை,கண்டு
சிந்திக்க வேண்டும்.சந்திக்க வந்த,
சரிந்ததை திருப்ப வேண்டும்-வீர
விந்துக்கு பிறந்த வேங்கையென சீற்றம்
விரைந்தேற்றி திருப்ப வேண்டும்.

வெட்டரிவாள் தன்னில் வேகத்தை வைத்தீர்,
விவேகத்தை கொன்று விடவா?-ஒரு,
பட்டரிவால் நம்மை பாரிகழ வைத்த
பழக்கத்தை தொடர்ந்து விடவா!-வேண்டாம்
கெட்டதெல்லாம் பேதும்.கொள்கையினை மாற்று
கொட்டுசமா தான முரசு-தலைமை
இட்டிடுமே புள்ளி,இழுத்துவிடு கோலம்.
எழுச்சிதரும் நமது அரசு.

எட்டியடி வைத்தால் இலக்கடைய முடியும்

எடுத்த அடி வழுக்கி விழுந்தால்,-மேலும்

திட்டமிடு திண்மை தரித்துவிடு நெஞ்சில்,

தோல்வி நிலை வெட்கி விழும் தாள்-வீணில்,

கட்டியழும் பழமை கழிசடையாம்,பெருமை

விட்டுவிடு,அல்ல விலகு உனை

தட்டி எழவைக்கும் தோல்விகளை மதித்தால்

தொடர்ந்துவிடும் வெற்றி உலகு.

வட்டநிலா எழுந்து வானில் வலம்வந்தால்,

வெளிச்சமதில் கங்குல் விலகும்-தீயாய்

சுட்டெரிக்கும் அந்த சூரியனும் யெழுந்தால்,

தேடும் வழிதன்னை விலக்கும்-இயற்க்கை

மொட்டவிழ்க்க மலரும் மலரினத்தில் வசந்தம்

வந்துவிழா கொண்டு குலுக்கும்-நாம்

மட்டும்,எதன்சேர்க்கை?மடமையினை ஒழிப்போம்

வசந்தம் நமக்[கு]அள்ளி வழங்கும்.

0 Comments:

Post a Comment

<< Home